ஆதிவாசிகளின் தலைவர் அரசியல்வாதிகளிடம் விடுத்துள்ள கோரிக்கை!
அரசியல் பேதங்களை புறந்தள்ளி நாடு எதிர்நோக்கியுள்ள நோய் தொற்றை கட்டுப்படுத்த ஆளும். எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் உருவாகியுள்ளதாக ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோ கோரிக்கை விடுத்துள்ளார்.
மொணராகலை பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் எனவும் கட்சி, சமயம் மற்றும் அரசியல் பேதங்கள் உள்ளிட்டவைகளை மறந்து சகலரும் நாட்டுக்காக ஒண்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் நேற்று எதிர்க் கட்சிகள் நடத்திய ஊடகச் சந்திப்பில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள கொரோனா தடுப்பு வேலைத் திட்டங்கள் தொடர்பில் கடுமையாக குற்றம் சுமத்தப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கருத்து தெரிவிக்கும் போது, கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இராஜாங்க அமைச்சர் இருந்த போதிலும் அவரின் கடமைகளை முன்னெடுக்க பணம் இல்லை. அதன் காரணமாகவே அவர் நாட்டில் உள்ள செல்வந்தர்களிடம் உதவி கேட்கிறார் என்றார்.
மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா கருத்து தெரிவிக்கையில்,
பாரிய நோய்கள் இல்லா விடின் வீட்டில் இருங்கள் என்று கூறும் அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது. வீட்டில் இருந்தால் மருந்துகளை பெறுவதும், உணவை பெறுவதும் எவ்வாறு? என கேள்வி எழுப்பினார்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்