பேரனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு வவுனியாவில் அஞ்சலி!
Vavuniya
Landslide In Sri Lanka
Flood
Cyclone Ditwah
By Independent Writer
Courtesy: கபில்
நாட்டில் அண்மையில் ஏற்ப்பட்ட வெள்ளப் பேரனர்த்தத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு வவுனியா - பூந்தோட்டம் பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பூந்தோட்டம் வர்த்தகர் சங்கம், சமூகநீதிக்கான வெகுஜன அமைப்பு, அற்புதமான இதயம் அமைப்பு ஆகியவையால் குறித்த நிகழ்வு ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் நினைவாக அகவணக்கம் செலுத்தப்பட்டு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்கள்
அதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக நிவாரண பொருட்களும் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் 486 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
அத்துடன் 341 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்த மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி