பிரான்சின் புதிய பிரதமருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
பிரான்சின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட கேப்ரியல் அட்டால் என்பவருக்கு எதிராக சமூக ஊடகங்களில் சர்ச்சைகள் உருவாகியுள்ளன.
முன்னாள் கல்வித்துறை அமைச்சரான கேப்ரியல் அட்டால், பிரான்ஸின் புதிய பிரதமாராக அந்நாட்டு அதிபர் இமானுவல் மேக்ரானால் நியமிக்கப்பட்டார்.
பிரதமராக தெரிவு செய்யப்பட்ட கேப்ரியல், யூத குடும்பத்தில் பிறந்தவர் ஒருவர் ஆவார், அவரது தந்தை ஒரு யூதர், தாய் கிறிஸ்தவர்.
வெறுப்பு கருத்துக்கள்
அத்துடன், கேப்ரியலும் கிறிஸ்தவராக ஞானஸ்நானம் பெற்றுள்ள நிலையில், கேப்ரியலின் தந்தை, நீ உன் வாழ்நாள் முழுவதும் யூதனாகத்தான் பார்க்கப்படுவாய் என்றும், உன் பெயரின் இரண்டாவது பகுதியிலுள்ள பெயர் யூத பெயர் என்பதால், எப்போதும் யூத எதிர்ப்பை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்றும் அவரது தந்தை கூறியுள்ளார்.
இந்நிலையில், கேப்ரியலின் தந்தை கூறியது தற்போது உண்மையாகியுள்ளது. அதேபோல், பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட கேப்ரியலுக்கு எதிரான யூத வெறுப்பு கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகிவருகின்றதாக கூறப்படுகிறது.
சிறைத்தண்டனை
அத்தோடு, தற்போது, கேப்ரியல் சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டுவருவதற்கு எதிராக யூத மாணவர்கள் யூனியன் கடுமையாக கண்டனங்களை வெளியிட்டு வருகிறது.
மேலும், கேப்ரியலை விமர்சிப்பவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படவேண்டும் என்றும் குறித்த அமைப்பு வலியுறுத்தி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |