புலம்பெயர்ந்தோர் மீது தொடரும் ட்ரம்பின் கடும் நடவடிக்கைகள்
அமெரிக்க (United States) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) நிர்வாகம் குற்றப்பின்னணி இல்லாத புலம்பெயர்ந்தோரையும் கைது செய்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதாகக் தெரிவித்து குற்றப்பின்னணி கொண்ட புலம்பெயர்ந்தோரை ட்ரம்ப் நிர்வாகம் கைது செய்து வருகின்றது.
இந்தநிலையில், அமெரிக்காவில் குற்றப்பின்னணி இல்லாத ஆனால், வெளிநாடுகளில் குற்றம் செய்ததாக தெரிவிக்கப்படும் புலம்பெயர்ந்தோரையும் அதிகாரிகள் கைது செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புலம்பெயர்தல்
இதனடிப்படையில், புலம்பெயர்தல் மற்றும் சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளவர்களில் சுமார் 37 சதவிகிதம் புலம்பெயர்ந்தோர், அமெரிக்காவின் எந்த குற்றச்செயலிலும் ஈடுபடாதவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் ஆறு மாதங்களில் அமெரிக்காவில் குற்றப்பின்னணி உள்ளவர்களும், குற்றப்பின்னணி இல்லாதவர்களுமான புலம்பெயர்ந்தோரும் 92,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
கைது எண்ணிக்கை
ஆரம்பத்தில் கைது எண்ணிக்கை அதிகமாக இருந்த நிலையில், மே மாதம் வரையில் கைது எண்ணிக்கை குறைந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும் அதனை தொடர்ந்து உள்நாட்டு பாதுகாப்புச் செயலர் மற்றும் வெள்ளை மாளிகையின் துணை தலைமை பணியாளர் ஆகியோர் நாளொன்றிற்கு 3,000 பேரையாவது கைது செய்யவேண்டும் என புலம்பெயர்தல் மற்றும் சுங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நிலையில், கைதுகள் அதிகரித்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். போதனாக்கு பேரிழப்பு - சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் திடீர் மறைவுக்கு சத்தியமூர்த்தி இரங்கல்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
