ஈரானுடன் போர் நிறுத்தம்! ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
ஈரான் மீது நடத்தப்படவிருந்த மிகப்பாரிய தாக்குதலுக்குச் சில மணிநேரங்களுக்கு முன்னதாக, அந்த நாட்டுடன் இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரானின் ஹோர்முஸ் நீரிணையை உடனடியாகவும், முழுமையாகவும், பாதுகாப்பாகவும் திறக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இந்த போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள ட்ரம்ப், “பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோருடன் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில், ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி வைக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இருதரப்பு போர்நிறுத்தம்
இதன் காரணமாக, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை திறக்கச் சம்மதித்தால், அடுத்த இரண்டு வாரங்களுக்குத் தாக்குதல்கள் நிறுத்தப்படும். இது ஒரு இருதரப்பு போர்நிறுத்தமாக அமையும்." என கூறியுள்ளார்.
மேலும், ஏற்கனவே ஈரான் தொடர்பான இராணுவ இலக்குகளை அமெரிக்கா எட்டிவிட்டதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், ஈரானிடமிருந்து 10 அம்சங்கள் கொண்ட ஒரு முன்மொழிவு கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இது ஒரு நிரந்தர அமைதி ஒப்பந்தத்திற்குச் சிறந்த அடிப்படையாக அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |