ட்ரம்பின் புதிய வரி விதிப்பு: வெளியான அதிரடி அறிவிப்பு
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு நூறு சதவீதம் சுங்க வரி விதிக்கப்படும் என அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பின், நாள்தோறும் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகின்றார்.
அமெரிக்காவுக்கு இறக்குமதி
இந்தநிலையில், தற்போது வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு, நூறு சதவீதம் சுங்க வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உற்பத்தி ஆலை இல்லாத அனைத்து நிறுவன மருந்துகளுக்கும் இது பொருந்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்காவில் ஆலை கட்டுமானப் பணியை ஆரம்பித்தால் வரி இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
