அதிரடியாக பின்வாங்கிய டிரம்ப் - ஆச்சரியத்தில் உற்று நோக்கும் உலகம்
கிரீன்லாந்து விவகாரத்தில் தனது முயற்சியை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகள் மீது வரிகள் விதிக்கப்படமாட்டாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஒரு கட்டமைப்பு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ருட்டே உடனான சந்திப்பிற்குப் பின்னரே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நட்பு நாடுகள்
கிரீன்லாந்தை கையகப்படுத்தும் தனது திட்டங்களை எதிர்த்தால், எட்டு ஐரோப்பிய நட்பு நாடுகள் மீது 10% வரிகளை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி மிரட்டியிருந்தார்.
டென்மார்க், நோர்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, பிரித்தானியா, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து வரும் பொருட்களுக்கு பிப்ரவரி 1 முதல் 10% சுங்கவரி விதிக்கப்படும் என்றும் பின்னர் அது 25% வரை உயர்த்தப்படலாம் என்றும் டிரம்ப் அறிவித்திருந்தார்.
இவ்வாறான பின்னணியில் ஐரோப்பிய நாடுகள் மீது வரிகள் விதிக்கப்படமாட்டாது என தற்பொது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்க வர்த்தக சந்தைகள் கடுமையாக உயர்ந்ததுடன், இது அமெரிக்காவின் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் ஓரளவு நின்மதியை அளிக்கக்கூடும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், குறித்த விடயத்தில் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருப்பதாக நேட்டோ அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |