நிமிடத்திற்கு நிமிடம் ஈரானை நெருங்கும் ஆபத்து - அதி உச்ச கோபத்தில் டொனால்ட் ட்ரம்ப்

Donald Trump Iran Israel-Hamas War Iran-Israel War
By Independent Writer Jun 18, 2025 05:56 AM GMT
Independent Writer

Independent Writer

in உலகம்
Report

உண்மையில் டொனால்ட் ட்ரம்ப் உளறுகிறாரா? இல்லை என்றால் ஒரு வித கோப உணர்வை வெளிப்படுத்துகிறாரா?

இது ஒருவிதமான அவருக்கே உரித்தான ராஜதந்திரப்பாணி. தனக்கு எதிராக இருக்கின்ற இன்னொரு நாட்டை அச்சுறுத்தல் ரீதியாக கையாள்வது இது ஒரு விதமான உளவியல் ராஜதந்திரம்.

எதிரி நாட்டை வார்த்தைகளால் அப்படிச் செய்வேன் இப்படிச்செய்வேன் என்று குறிப்பிட்டு, நோகாமல் இரத்தம் சிந்தாமல் அடைவைப் பெறுகின்ற அமெரிக்க மனநிலை அது.

இப்படித்தான் முன்பு காசாவில் நரகத்தை காட்டுவேன் என பணயக்கைதிகளை விடுவித்தார், நேட்டோவில் இருந்து இராணுவத்தை எடுத்துவிடுவேன் என்று ஐரோப்பிய நாடுகளை பணிய வைத்தார்.

போர் தொடங்குகிறது..! களத்திற்கு வரும் கமேனி

போர் தொடங்குகிறது..! களத்திற்கு வரும் கமேனி

அமெரிக்காவின் இராணுவ பலம்

ரஸ்யாவையும் பனாமா விடயத்தில் சீனாவையும் பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவையும் என இப்படியாண பாணியை கையாண்டு வந்திருக்கிறார் இப்படித்தான் இப்போது ஈரானிடம் தனது கைவரிசைகளை காட்ட ஆரம்பித்திருக்கிறார் உண்மையில்.

அதன் உயர் தலைவர் ஒளிந்திருக்கும் இடம் தனக்கு தெரியும் என்றும் இன்னொரு சந்தர்ப்பத்தில் தெஹ்ரானில் இருந்து மக்களை வெளியேற சொல்லுவதும் மறுபுறம் மத்தியகிழக்கின் இராணுவ நிலைகளை ஆயுதங்களால் பலப்படுத்துவதும் அமெரிக்காவின் முழு இராணுவபலத்தை எதிர்கொள்ள நேரிடும் என்பதும் ஏன் ஏதோ தாங்கள் அதி உச்ச கோபத்தில் இருப்பது போல காட்டிக்கொள்வது இப்படியென அவர் தனது வழமையான பாணியை கொஞ்சம் பதற்றமாக வெளிப்படுத்தி நிற்கிறார்.

நிமிடத்திற்கு நிமிடம் ஈரானை நெருங்கும் ஆபத்து - அதி உச்ச கோபத்தில் டொனால்ட் ட்ரம்ப் | Trump Demands Unconditional Surrender To Iran

ஆனால் அமெரிக்காவுக்கு இதைவிட சிறந்த சந்தர்ப்பம் வேறு இல்லை, ஈரானின் அணு ஆயுத கனவை சிதைப்பதற்கும் மத்திய கிழக்கில் இருந்து சீனா, ரஸ்யா போன்ற நாடுகளின் தலையீட்டை இல்லாது செய்வதற்கும் ஈரானின் தற்போதைய ஷியா மதப்பிரிவு தலைவர்களின் ஆட்சியை இல்லாது செய்து அங்கு தமக்கு சார்பான ஆட்சியை ஏற்படுத்தச்செய்வதற்கு இது ஒன்றுதான் சரியான சந்தர்ப்பம்

எனவே வழமையைப்போல வாய் வார்த்தை அச்சமூட்டல்களாலோ அல்லது ஆயுத பிரியோகத்தின் மூலமாகவோ எப்படியாவது தனது இலக்கை அடைந்துவிட வேண்டிய கட்டாயம் அமிரிக்காவுக்கு இருக்கிறது.

அமெரிக்கா மத்திய கிழக்கில் தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள பயன்படுத்தும் இஸ்ரேல் ஆக இருக்கலாம் சவுதி அரேபியாவாக இருக்கலாம் இந்த நாடுகளின் பரம்பரை பகைவனான ஈரானை வேட்டையாடுவதன் மூலமாக தனது அடிமைகளையும் செல்லக்குழந்தையான இஸ்ரேலையும் தக்கவைத்துக் கொள்ளும் தலையாய தேவை இப்போதைக்கு அமெரிக்காவுக்கு உண்டு.

சிதறும் ஈரானிய தலைநகர்: சரமாரியாக தாக்கும் இஸ்ரேல் ஏவுகணைகள்

சிதறும் ஈரானிய தலைநகர்: சரமாரியாக தாக்கும் இஸ்ரேல் ஏவுகணைகள்

ஈரான் பறிகொடுத்த விடயங்கள்

அதுமாத்திரமில்லாமல் இஸ்லாமிய உலகம் ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டிப்பதாக இருக்கட்டும் அல்லது ஈரானோடு நாங்கள் இருப்போம் என்ற வார்த்தைகளாக இருக்கட்டும் இவை எல்லாம் வெறும் ஆறுதலுக்கானதே தவிர ஆத்மார்த்தமனாது அல்ல. எப்போது இந்த யுத்த தளத்தில் அமெரிக்கா நேரடியாக நுழைகிறதோ அந்தக்கணமே தமது ஆதரவை விலக்கி கண்மூடி படுத்துவிடும் அரபு உலகம்.

எப்படியாக இருந்தாலும் இன்னும் பத்து வருடங்களுக்கும் மத்திய கிழக்குதான் உலகின் இயங்கியலுக்கான வலுவை வழங்கப்போகிறது. எனவே மத்திய கிழக்கை தனது ஆதிக்க வரம்பில் வைத்துக்கொள்ள இப்போதைக்கு மிகப்பெரிய தடையாக இருப்பது இந்த ஈரான்தான்.

நிமிடத்திற்கு நிமிடம் ஈரானை நெருங்கும் ஆபத்து - அதி உச்ச கோபத்தில் டொனால்ட் ட்ரம்ப் | Trump Demands Unconditional Surrender To Iran

ஆக ஈரானை வீழ்த்த அமெரிக்காவுக்கு இதைவிட சிறந்த சந்தர்ரப்பம் வேறு கிடையாது, முக்கியமாக ஈரான் விவகாரத்தில் இப்போது ஈரான் தனது தனிப்பட்ட நலன்களை ஒவ்வொன்றாக இஸ்ரேலிடம் பறிகொடுத்துவிட்டது. அனுபவம் உள்ள ஆலோசகர்கள், இராணுவ புலனாய்வு தளபதிகள், விஞ்ஞானிகள் அடிமேல் அடியாக அவை மிகப்பெரிய இழப்புகளாய் மாறி நிற்கிறது.

இன்று நம்மிடையே செய்திகளை பகிர்பவர்களின் மன எண்ணங்கள் போல அந்த யுத்த களம் இல்லை. இஸ்ரேல் தாக்கப்படுகிறது என்பது உண்மைதான். ஆனால் ஈரான் கொண்டாடும்படியான வெற்றியை அடையவோ அதற்கான பாதைகளிலோ கூட இல்லை.

சமூக ஊடகங்களில் மிக மோசமாக இஸ்ரேலை ஈரான் தாக்குகிறது என்று எழுதி மகிழ்ந்தபோதெல்லாம் அதன் தாக்குதல் திறன் மட்டுப்பட்டுப்போயிருந்தது.

தினமும் இரவுகளில் பத்துக்கும் குறைவான ஏவுகணைகளையே வீசுவதனையும் அதில் ஒன்றோ இரண்டு ஏவுகணைகள் இஸ்ரேலில் விழுந்து வெடிப்பதுமாகவே இருந்து வருகிறது.

ஈரான் வானில் வட்டமிட்டு சிதறவிடும் இஸ்ரேலின் 60 ஜெட் விமானங்கள்

ஈரான் வானில் வட்டமிட்டு சிதறவிடும் இஸ்ரேலின் 60 ஜெட் விமானங்கள்

இரும்பு அடுக்கு வான் பாதுகாப்பு வலயம்

உண்மையில் இஸ்ரேலின் இரும்பு அடுக்கு வான் பாதுகாப்பு வலயம் மீதான பிரமிப்புகளை பொடியாக்கியது இஸ்ரேல்தான். ஆனால் அங்கு யூதர்கள் கொல்லப்படவில்லை அவர்கள் பாதுகாப்பான தளங்களில் பாதுகாக்கப்படுகிறார்கள்.

காசாவில் செத்து மடிவதைப்போல இஸ்ரேலிலும் பலஸ்தீனர்களே பாதுகாப்பற்ற நிலைகளில் கொல்லப்படுகிறார்கள், சுதந்திர பலஸ்தீனத்திற்கு ஆதரவு வழங்கும் ஈரான்தான் அந்த மக்களின்இருப்பிடங்களை நோக்கி ஏவுகணைகளை வெடிக்கச்செய்திருக்கிறது.

நிமிடத்திற்கு நிமிடம் ஈரானை நெருங்கும் ஆபத்து - அதி உச்ச கோபத்தில் டொனால்ட் ட்ரம்ப் | Trump Demands Unconditional Surrender To Iran

இப்போதைக்கு இருக்கின்ற ஒரு சில கேள்விகளில் உண்மையில் இஸ்ரேல் இந்த யுத்த்தில் தோற்று இழப்புகளை சந்தித்துள்ளது என்பது ஒரு வதந்தி.

ஈரானுக்கென்றான ஆதரவு தளத்தில் அரேபிய நாடுகளுக்கு அப்பால் துணை வரும் என்று நம்பப்படுகின்ற சீனா வெறும் கண்டன அறிக்கைகளோடு நிற்கிறது. ரஸ்யா உக்ரைன் யுத்த்த்தில் மூழ்கிக்கிடக்கிறது வடகொரியாவோ அவசர உதவிகளை பெற்றுக்கொள்ளும் தூரத்தில் இல்லை. மறுபுறம் ஈரானின் பாதுகாப்பு கவசமான சிரியாவின் அசாத் றெஜீமன்ட் துடைத்தெறியப்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லாக்களும் கமாசும் தங்களையே தற்காத்துக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறது. வெறும் தான் குவித்து வைத்திருக்கும் ஏவுகணைகளை மாத்திரம் வைத்துக்கொண்டு தங்களின் வெற்றிக்காக எந்த எல்லைக்கும் சென்றுவரும் நிலைப்பாட்டினை உடைய இஸ்ரேலையோ உலக வல்லரசாக இன்றுவரை தன்னை வெளிப்படுத்திவரும் அமெரிக்காவையோ எதிர்த்து போர்புரிவது எவ்வளவுக்கு எவ்வளவு சாத்தியம் என்ற கேள்வியே எழுகிறது.

உச்சக்கட்ட போர் - F 35 விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்: பின்வாங்கும் அமெரிக்கா

உச்சக்கட்ட போர் - F 35 விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்: பின்வாங்கும் அமெரிக்கா

ஈரானின் தாக்குதல் திட்டம்

ஒரு சிலர் எப்படியாவது இஸ்ரேலின் அழிவுச்செய்தியையும் ஈரானின் வெற்றியையும் பேசவேண்டும் என்பதற்காக தமது சொந்த வார்த்தைகளாக அமெரிக்காவை ஒன்றும் இல்லை என்று சொன்னாலும் அது அவ்வளவு எளிதில் ஒன்றும் இல்லாமல் போகும் நாடு அல்ல. அமெரிக்காவின் இராணுவ ஆயுத வலுச்சமநிலை என்பது எப்படியானது என்பதை நிரூபிப்பதற்கு இன்னும் சரியான களம் அமையவில்லை என்பதே நிதர்சனம்.

நிமிடத்திற்கு நிமிடம் ஈரானை நெருங்கும் ஆபத்து - அதி உச்ச கோபத்தில் டொனால்ட் ட்ரம்ப் | Trump Demands Unconditional Surrender To Iran

லெபனான் யுத்தத்தையும் ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்தையும் வைத்து ஈரானில் நடக்கப்போவதை அனுமானிப்பது என்பது ஒரு அடிமுட்டாள்தனமாகவே தோன்றுகிறது. உண்மையில் அமெரிக்காவை எதிர்த்து நிற்க வேண்டுமாக இருந்தால் ஈரான் தனது ஆதரவுதளத்தை வலுப்படுத்த வேண்டும்.

தமது சொந்த நலன்களை முன்னிலைப்படுத்தாது ஈரானுக்காக இறங்கி வேலை செய்யும் ஒரு பக்கபலத்தை ஈரான் பெறவேண்டும். பரந்த பாட்டில் ஏவுகணைகளை பொழிவதை ஒரு போர்யுக்தி என நினைப்பதை தவிர்த்து இலக்குகளின் மீது குறிவைக்கவேண்டும். எதிரியின் பலமான பாதுகாப்பை செயலிழக்கச் செய்யவேண்டும். இஸ்ரேலைப் போல ஒரு துல்லியமான தாக்குதல் வரம்பை எட்டவேண்டும்.

ஆனால் இப்போதைக்கு இது எல்லாம் ஈரானால் சாத்தியமா என்பதும் தனக்கு கிடைத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தை அமெரிக்கா பயன்படுத்தாமல் தவறவிடுமா என்பதுமே இப்போதைக்கு நம் முன்னே உள்ள கேள்வி....

பிள்ளையான் கைது விவகாரம்: உயர் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

பிள்ளையான் கைது விவகாரம்: உயர் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025