கத்தார் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி: ட்ரம்பின் அறிவிப்பு
கத்தாரை (Qatar) பிற நாடுகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் உத்தரவை அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பிறப்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனடிப்படையில், கத்தார் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பினரின் முக்கிய தலைவர்களை குறிவைத்து கத்தாரில் இஸ்ரேல் (Israel) தாக்குதல் நடத்தியது.
அமைதி ஒப்பந்தம்
இதனால், அந்தப்பகுதியில் பதற்றம் ஏற்பட்ட நிலையில் சமீபத்தில் அமெரிக்கா சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ட்ரம்ப்பை சந்தித்தார்.
அப்போது, காசாவில் பாதுகாப்பு ஏற்படுத்துவது குறித்த அமைதி ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஹமாஸ் அமைப்பு
இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள ஹமாஸ் அமைப்புக்கு மூன்று நாள் ஒப்பந்தம் டொனால்ட் ட்ரம்ப் கெடு விதித்து இருந்தார்.
இந்த சந்திப்பின் போது, தொலைபேசி வாயிலாக பெஞ்சமின் நெதன்யாகுவை கத்தார் பிரதமர் ஷேக் முகம்மது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியுடன் டொனால்ட் ட்ரம்ப் உரையாட வைத்துள்ளார்.
அப்போது கத்தார் மீது நடந்த தாக்குதலுக்கு அவரிடம் இஸ்ரேல் பிரதமர் மன்னிப்பு கோரியதாக தெரிவிக்கப்பட்டது.
இதனுடன் மற்ற நாடுகளின் தாக்குதலில் இருந்து கத்தாரை பாதுகாப்பது தொடர்பான உத்தரவில் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
