மேற்குக் கரை குறித்து இஸ்ரேலுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை
ஆக்கிரமிப்பு மேற்குக் கரையை இஸ்ரேல் (Israel) தன்னுடன் இணைத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டேன் என அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிப்பு மேற்குக் கரையின் சில பகுதிகளையாவது இஸ்ரேல் அரசு தன்னுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என இஸ்ரேல் அதிகாரிகள் அண்மைக்காலமாக தெரிவித்துவருகின்றனர்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
மேற்குக் கரை
மேலும் தெரிவித்த அவர், மேற்குக் கரையை தன்னுடன் இஸ்ரேல் இணைத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அது நடக்கப்போவதில்லை எனவும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
பிணைக் கைதி
காஸாவில் போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நிலையில் அமெரிக்கா உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸிடமிருந்து பிணைக் கைதிகளை மீட்டு போரை முடிவுக்குக் கொண்டுவருவோம் எனவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
