அமெரிக்க கார் நிறுவனங்களுக்கு ட்ரம்ப் விடுத்த கடும் எச்சரிக்கை
உள்நாட்டில் மகிழுந்துக்கான விலையை அதிகரிக்கக் கூடாது என அமெரிக்காவில் உள்ள கார் நிறுவனங்களுக்கு அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald trump) எச்சரித்துள்ளார் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான வரியானது 25 சதவீதம் அதிகரித்துள்ள காரணத்தால் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர் நாட்டின் செலவுகளை குறைப்பதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
ட்ரம்பின் உத்தரவு
அந்த வகையில் கனடா, இந்தியா, சீனா, மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து, அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யும் கார்களுக்கு 25 சதவீத வரியை ட்ரம்ப் விதித்துள்ளார்.
இந்நிலையில், உள்நாட்டு கார்களுக்கான விலையை கார் நிறுவனங்கள் அதிகரிக்க கூடாது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், பொருளாதாரத்தை மேம்படுத்தும் தனது செயற்பாடுகளுக்கு உள்நாட்டு நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டுமெனவும், இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியும், விற்பனையும் அதிகரிக்க முடியும் எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
