முடிந்தால் வெளியேற்றுங்கள் பார்க்கலாம் - அரசுக்கு சவால் விடுத்துள்ள மைத்திரி தரப்பு
goverment
Dayasiri Jayasekara
challenges
By Jaso
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 பேரையும் முடிந்தால் வெளியேற்றுங்கள் பார்க்கலாம் என சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara)அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.
அப்படி நடந்தால் அரசில் இருந்து நிறைய பேர் வெளியே வருவார்கள் என்றும், சவால் விடுபவர்கள் அதை அப்போது பார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.
அண்மைய நாட்களாக ஆளும் தரப்புக்கும் மைத்திரி தரப்புக்கும் இடையே கடுமையான வார்த்தைப்பிரயோககங்கள் இடம்பெற்று வருவதும் வெளிப்படையாகவே அரசிலிருந்து மைத்திரி தரப்பு வெளியேறலாம் என அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்