துருக்கி நிலநடுக்கம் - காணாமல் போன இலங்கைப் பெண் சடலமாக மீட்பு!
Sri Lanka
Sri Lankan Peoples
Turkey
Turkey Earthquake
By Pakirathan
கடந்த 6 ஆம் திகதி துருக்கி - சிரியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால், அங்கிருந்த 15 இலங்கையர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருந்ததுடன், இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் காணாமல் போயிருந்தார்.
காணாமல் போயிருந்த குறித்த இலங்கைப் பெண்ணைத் தேடி தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில், காணாமல் போன இலங்கைப் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக துருக்கியிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
கண்டி - கலகெதரவில் இருந்து 20 வருடங்களுக்கு முன்னர் துருக்கிக்கு சென்று அங்கு வசித்து வந்த 69 வயதுடைய இலங்கைப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணின் சடலம் தற்போது அவரது மகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி