பதவி விலகி மீண்டும் மக்களிடமே போவேன் - த.வெ.க. தலைவர் விஜய் அதிரடி
பதவி விலகல் செய்துவிட்டு மீண்டும் மக்களிடமே போவேன் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளதாக தவெக வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆட்சியே வேண்டாம், யாருக்கும் அடிமையாக இருக்க நான் விரும்பவில்லை. பதவிக்காக எவர் காலிலும் விழ தயாரில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் பற்றி எனக்கும் தெரியும். ஆனால், மக்களின் தீர்ப்புக்கு எதிரக இப்படி எல்லோரும் எனக்கு எதிராக அணி திரள்வார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை.
நிறைவேற்ற முடியாத நிபந்தனை
மேலும், "ஜாதி, மத, ஊழலுக்கு எதிரான அரசியலை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதே சிந்தனையுள்ள கட்சிகள் ஆதரவு தருவார்கள் என நம்பினேன்.

ஆனால் சிலர் தற்போது நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை முன்வைக்கிறார்கள்.
ஆட்சி அமைப்பதற்கு முன்பே இவ்வளவு அழுத்தம் கொடுப்பவர்கள், ஆட்சிக்கு பிறகு என்ன செய்வார்கள் என்ற பயம் இருக்கிறது," என்றும் அவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அதேநேரத்தில், "ஒன்றே முக்கால் கோடி மக்களின் வாக்குகளை வீணாக்கக் கூடாது. நீங்கள் பின்வாங்கினால், அந்த இடத்தை நீங்கள் எதிர்க்கும் சக்திகள் நிரப்பிவிடும்," எனவும் விஜயிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |