யாழில் சோகம் : இரண்டு மாத ஆண் குழந்தை பலி
யாழில் (Jaffna) இரண்டு மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (25) இடம்பெற்றுள்ளது.
இதன்போது துன்னாலை மேற்கு, கரவெட்டியைச் சேர்ந்த எட்வேட் தனுசன் டெரித் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.
ஆண் குழந்தை
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 22 ஆம் திகதி குழந்தைக்கு சளியுடன் கூடிய இருமல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மந்திகை வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மரண விசாரணை
இருப்பினும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


யார் அகதி..! : உலகத்தமிழர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய தீர்ப்பு 11 மணி நேரம் முன்
