கையூட்டு பெற்ற மாநகர சபை அதிகாரிகளுக்கு நேர்ந்த கதி
Sri Lankan Peoples
Bribery Commission Sri Lanka
Sri Lanka Police Investigation
By Dhilak
காலி மாநகர சபையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள், ரூ.5,000 லஞ்சம் கோரிய மற்றும் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
ஒரு வன்பொருள் கடையில் விளம்பரப் பலகையை வைத்ததற்காக மாநகர சபைக்குச் செலுத்த வேண்டிய வரித் தொகையைப் பதிவு செய்யும் ஆவணத்தை வழங்குவதற்கு ஈடாக இந்த லஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

காலி மாநகர சபையின் வருவாய் ஆய்வு மையத்தில் வைத்து காலை சுமார் 8.50 மணியளவில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சந்தேக நபர்கள் காலி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 1 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்