தங்கநகை திருட்டு - இரண்டு காவல்துறையினர் கைது
Sri Lanka Police
Gold smuggling
Sri Lanka Police Investigation
By Sumithiran
தங்கநகை திருடப்பட்ட வழக்கில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் பிரிவு நிலைய கட்டளைத் தளபதி மற்றும் பாணந்துறை தலைமையக காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏழு பவுண் தங்கம் மறைப்பு

தங்கநகை திருடப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரின் தங்க நகைகளில் இருந்து 07 பவுண் தங்கத்தை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாமல் வைத்திருந்த சம்பவம் தொடர்பிலேயே இந்த இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் சந்தேக நபர்களான காவல்துறை உத்தியோகத்தர்களை கைது செய்துள்ளனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி