சுற்றிவளைப்புக்கு சென்ற காவல்துறையினர் மீது தாக்குதல்: சந்தேகநபர் கைது
Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
ஹெரோயின் போதைபொருள் வைத்திருந்த சந்தேகநபரை கைது செய்யச் சென்ற இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த இரு காவல்துறை உத்தியோகத்தர்களும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், நீர்கொழும்பு, மெடபிட்டிபான பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதல் சம்பவம்
லஞ்ச ஒழிப்புச் சுற்றிவளைப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த போது கிடைத்த தகவலின் பிரகாரம், சந்தேகநபரை அவரது வீட்டில் வைத்து கைது செய்யச் சென்ற போதே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்