மகிந்த எடுத்த முடிவால் காப்பாற்றப்பட்ட இரு முக்கிய நபர்கள்! வெளிச்சத்துக்கு வந்த தகவல்
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பதவி விலகல் ஊடாக இரு முக்கிய நபர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் அ. சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பதவி விலக தீர்மானித்தது அரச தலைவர் கோட்டாபயவை காப்பாற்றுவதற்காகவும், அடுத்து எதிர்காலத்தில் அரசியலுக்கு வரக்கூடிய தனது மகனான நாமல் ராஜபக்சவை காப்பாற்றுவதற்காகவும் இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மகிந்த ராஜபக்சவின் பதவி விலகலின் பின்பும் காலி முகத்திடலில் கோட்டா கோ கம கிராமம் மீள அமைக்கப்பட்டு வருவது போராட்டம் முடிவடையவில்லை என்பதை உணர்த்துவதற்காக இருக்கலாம் என்ற பார்வையையும் ஏற்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்றே போராட்டங்கள் முன் எடுத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் தற்போதை நெருக்கடி நிலை குறித்தான பூரண விளக்கத்தையும், சட்ட ரீதியான தெளிவுப்படுத்தல்களையும் ஊடறுப்பு நிகழ்ச்சியின் ஊடாக காணலாம்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
