இஸ்ரேல் படைக்கு தொடரும் இழப்புகள்
வடக்கு காசா(gaza) பகுதியில் சனிக்கிழமையன்று(02) நடந்த சண்டையின் போது இரண்டு இஸ்ரேலிய (israel)வீரர்கள் கொல்லப்பட்டதாக இராணுவம் அறிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் மற்றொரு வீரர் படுகாயமடைந்துள்ளதாகவும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் இராணுவத்தின் உயிரிழப்பு எண்ணிக்கை
இவர்களின் மரணத்துடன் காசாவில் ஹமாஸுக்கு எதிரான தரைவழித் தாக்குதலில் இஸ்ரேல் இராணுவத்தின் உயிரிழப்பு எண்ணிக்கை 370 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த மாதம் தொடங்கிய வடக்கு காசாவின் ஜபாலியாவில் நடந்து வரும் படை நடவடிக்கையின் போது சுமார் 900 பயங்கரவாத செயல்பாட்டாளர்களைக் கொன்றதாக சனிக்கிழமையன்று இஸ்ரேலிய படைத்துறை அறிவித்தது.
மேலும் 700 பாலஸ்தீனியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் குறைந்தது 300 பேர் பயங்கரவாத குழுக்களின் உறுப்பினர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய படைத்துறை தெரிவித்துள்ளது.
பெரிய நிலத்தடி ஆயுத தயாரிப்பு ஆலை தகர்த்தழிப்பு
இதேவேளை காசா நகரில், ஹமாஸ் அமைப்பால் இயக்கப்பட்ட ஒரு பெரிய நிலத்தடி ஆயுத தயாரிப்பு ஆலையை இஸ்ரேல் படையினர் கண்டுபிடித்து தகர்த்தழித்துள்ளனர்.
சுரங்கப்பாதையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் கடல் வழியாக இஸ்ரேலுக்குள் ஊடுருவுவதற்கு பயன்படுத்திய ரொக்கெட்டுகள், மோட்டார்கள், கையெறி குண்டுகள் மற்றும் டைவிங் கருவிகளை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படும் பட்டடைகள் மற்றும் நூற்றுக்கணக்கான பாகங்கள் துருப்புக்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரேல் படைத்துறை குறிப்பிட்டது.
மேலும் சுரங்கப்பாதையில், ஹமாஸ் செயற்பாட்டாளர்கள் நீண்ட காலம் தங்கக்கூடிய பல அறைகளை கண்டுபிடித்ததாகவும். அறைகளில் சமையலறைகள், படுக்கையறைகள் மற்றும் அலுவலகங்கள் இருந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |