வெற்றியை நெருங்கும் உக்ரைன்: ட்ரம்ப் வெளிப்படுத்திய ரகசிய திட்டம்-சிக்கலில் ரஷ்யா
ரஷ்யாவிடம் (Russia) இழந்த பகுதிகளை உக்ரைனால் (Ukraine) திரும்ப மீட்க முடியும் என அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .
ஐ.நா. பொதுச் சபையின் 80 ஆவது அமா்வில் பங்கற்க வந்திருந்த உக்ரைன் ஜனாதிபதி மற்றும் டொனால்ட் ட்ரம்பிற்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து, சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே டொனால்ட் ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.
யூனியனின் உதவி
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ரஷ்யாவுடன் போராடி அந்த நாட்டிடம் இழந்த பகுதிகளையெல்லாம் மீட்கும் நிலையில்தான் உக்ரைன் இருக்கின்றது.
ஐரோப்பிய யூனியனின் உதவியுடன் உக்ரைன் இந்த வெற்றிவாகையைச் சூடும்.
நேட்டோவின் ஆதரவு
நேரம், பொறுமை மற்றும் ஐரோப்பிய நாடுகளின் குறிப்பாக நேட்டோவின் ஆதரவு ஆகியவற்றின் உதவியுடன் இந்தப் போா் தொடங்கியதற்கு முன்பிருந்த எல்லைகளை உக்ரைனால் மீண்டும் அடைய முடியும்.
ஒரு இலக்கே இல்லாமல் இந்தப் போரை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தொடங்கியுள்ளாா்.
இராணுவ சக்தி
ஓா் உண்மையான இராணுவ சக்தி தலையிட்டால் இந்தப் போா் சில வாரங்களில் முடிந்துவிடும், தற்போது புடினும் மற்றும் ரஷ்யாவும் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனா்.
ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க உக்ரைனுக்கு இதுவே சரியான தருணம்.
இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா முழு ஆதரவையும் அளிக்கும், நேட்டோ வழியாக உக்ரைனுக்குத் தேவையான ஆயுதங்களை அமெரிக்கா தொடா்ந்து விநியோகிக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
