"காசா போரினால் உலக நாடுகள் உக்ரைனை மறந்து விட்டது" ஜெலென்ஸ்கி கவலை
இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையிலான போர் உக்ரைன் மீதான உலக கவனத்தை நீக்கிவிட்டதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் இலக்குகளில் இதுவும் ஒன்று எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வொண்டலீனை சந்தித்த போதே உக்ரைன் அதிபர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வான்வெளியை கட்டுப்படும் ரஷ்யா
உக்ரைன் மீதான கவனத்தை ரஷ்யா பலவீனப்படுத்த விரும்புவதாகக் கூறிய ஜெலென்ஸ்கி, அனைத்தும் தங்கள் அதிகாரத்தின் கீழ் இருப்பதாக வலியுறுத்தினார்.
ரஷ்யா தனது வான்வெளியை கட்டுப்படுத்தி வருவதாகவும், அந்த நிலையை மாற்ற, உக்ரைனுக்கு விரைவில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எப்-சிக்ஸ்டீன் போர் விமானங்கள் தேவை என்றும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும், விமான எதிர்ப்பு ஆயுதங்கள் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.
ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை
இந்த நிலையில், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அழுத்தம் கொடுக்கப்படுவதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் அல்லது அமெரிக்கா மற்றும் தனது நட்பு நாடுகளின் தலைவர்களிடமிருந்து இதுவரை தனக்கு அத்தகைய அழுத்தம் இல்லை எனவும் அப்படி ஒரு சம்பவம் நடக்கபோவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.