ரஷ்யாவுடன் மோத ஐரோப்பிய நாடுகளுக்கு பலம் இல்லை; ஐரோப்பாவை அமெரிக்காதான் காக்கிறது!
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை எதிர்த்து போரிடும் நிலையில் ஐரோப்பிய நாடுகள் பலமானதாக இல்லை என ஃபின்லாந்து பிரதமர் சன்னா மரின் தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலியா சிட்னியில் உள்ள லோவி இன்ஸ்டிடியூட் திங்க் டேங்கில் நேற்று (வெள்ளிக்கிழமை) உரை நிகழ்த்திய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பா பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்; சன்னா மரின்

அமெரிக்கா உக்ரைனுக்கு அதிக அளவில் ராணுவ உதவிகளை வழங்கி உள்ளதுடன், அமெரிக்கா இல்லை என்றால் ஐரோப்பாவின் பாதுகாப்பு கேள்விக்குறியே எனக் கூறியுள்ளதுடன், ஐரோப்பாவின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
ஐரோப்பிய நாடுகளின் இராணுவப் பங்களிப்புக்கள் உக்ரைனுக்கு வழங்கப்படுவதால், ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்புகளை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என கூறினார்.
ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் செயற்பாட்டினை விமர்சித்த சன்னா மரின்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவியில் இருந்தபோது, நேட்டோ நாடுகளின் பாதுகாப்பிற்கு போதியளவு செலவு செய்யவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளதுடன், சமீபத்திய நாட்களில் ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகளை பேண சில ஐரோப்பிய நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளையும் விமர்சித்துள்ளார்.
உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் பங்களிப்பு

கடந்த பெப்ரவரியில் போர் தொடங்கியதில் இருந்து, அமெரிக்கா மொத்தமாக 18.6 பில்லியன் டொலர்களை உக்ரைனுக்கு செலவளித்துள்ளது.
அமெரிக்காவிற்கு அடுத்ததாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியா ஆகியவை அதிக பங்களிப்புக்களை வழங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேட்டோவில் சேர முயற்சிக்கும் பின்லாந்து

நீண்ட எல்லையை ரஷ்யாவுடன் பகிர்ந்து கொள்ளும் பின்லாந்து, நேட்டோவில் சேர முறையாக மே மாதம் விண்ணப்பித்தது.
அதன் அணுகல் நெறிமுறைகள் ஜூலை கையொப்பமிடப்பட்டாலும் அவற்றை மாற்றுவதற்கு அனைத்து உறுப்பினர்களாலும் அங்கீகரம் வழங்கப்படவில்லை.