ரஷ்யாவால் அழிக்கப்பட்ட உக்ரைனிய துருப்புகள்: செர்ஜி ஷோய்குவின் பகிரங்க அறிவிப்பு
உக்ரைனிய படைகள் எதிர்தாக்குதல் மேற்கொள்ள ஆரம்பித்ததில் இருந்து உக்ரைன் 1,25,000 துருப்புகளை இழந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு அறிவித்துள்ளார்.
ரஷ்ய - உக்ரைன் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளை எட்டிவிட்டுள்ள நிலையில் ரஷ்யாவின் தாக்குதல்களின் உக்ரைனின் பல துருப்புக்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு கூறுகையில், உக்ரைன் தனது எதிர்தாக்குதலை ஜுன் மாதம் தொடங்கியதில் இருந்து 1,25,000 துருப்புகளை இழந்துள்ளதாக கூறியுள்ளார்.
போர்க்களம்
மேலும், 16,000 யூனிட் அளவுடைய பல்வேறு ஆயுதங்களை உக்ரைன் இழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “மேற்கத்திய ஆயுதங்களை வழங்குதல் மற்றும் உக்ரேனிய கட்டளையின் மூலோபாய இருப்புகளை போரில் அறிமுகப்படுத்துதல் ஆகியவை போர்க்களத்தில் நிலைமையை மாற்றவில்லை.
ரஷ்யாவின் போர் திறன்
எங்கள் இராணுவ வீரர்கள் திறமையாகவும், தீர்க்கமாகவும் செயல்படுகிறார்கள்.மேலும் சாதகமான நிலைகளை ஆக்கிரமித்து, அனைத்து திசைகளிலும் தங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களை விரிவுபடுத்துவார்கள்” என்றார்.
அத்துடன், ரஷ்யாவின் ஆயுதப் படைகள் உக்ரைனில் முன் வரிசையில் முன்னேறிவிட்டதாகவும், தீவிரமான பாதுகாப்பை மேற்கொள்வோம் மற்றும் ஆயுதப்படைகளின் போர் திறனை அதிகரிப்போம் என்றும் செர்ஜி ஷோய்கு எச்சரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |