சிறையில் உள்ள மற்றுமொரு பாதாள குழு தலைவருக்கு உயிராபத்து - நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னனும் பாதாள உலக குழு தலைவருமான கம்போலா விதானகே சமந்த குமார அல்லது வெலேசுதா, என்பவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை பூசா சிறைச்சாலையில் இருந்து வெளியே கொண்டு செல்வதை நிறுத்துமாறு மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணைகளை நடத்துதல் என்ற போர்வையில் தனது மகனை சிறையில் இருந்து வெளியே அழைத்துச் சென்று கொலை செய்ய சதி செய்வதாக தெரிவித்தும் அதனை தடுத்து நிறுத்த உத்தரவிடக்கோரியும் வெலேசுதாவின் தாய் ஜி. மாலினி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்தபோதே மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
வழக்கறிஞர் சனத் விஜேவர்தன தாக்கல் செய்த ரிட் மனுவை தலைமை நீதிபதி அர்ஜுனா ஒபேசேகர மற்றும் நீதிபதி ருவான் பக்னானந்து ஆகியோர் விசாரித்தனர்.
ஹெரோயின் கடத்தல் குற்றம் உறுதிசெய்யப்பட்டநிலையிலும் சிறைக்கு வெளியே சந்தேக நபர்களை சுட்டுக் கொன்ற சந்தேகத்தின் பேரில் உயர்நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர், தற்போது பூசா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மனுவில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் உண்மைதானா என உறுதிப்படுத்த எதிர்வரும் 24 ஆம் திகதி மீண்டும் குறித்த வழக்கை ஆராயவும் அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பதிலளித்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏற்கனவே இரண்டு பாதாள உலக குழுவைச் சேர்ந்தவர்களை சிறையில் இருந்து பொலிஸார் அழைத்துச் சென்ற நிலையில் தப்பியோட முயற்சித்த அல்லது பொலிஸாரை தாக்க முற்பட்ட நிலையில் சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்