யுத்த மௌனிப்பின் பின்னரான தாயக ஆக்கிரமிப்பு - சுய ஆட்சி இல்லா தேசம்!

United Nations Gajendrakumar Ponnambalam Sri Lanka Sri Lanka Final War
By Kalaimathy Mar 23, 2023 07:37 PM GMT
Report

சிறிலங்காவிற்கு ஐ.நாவின் சிறப்பு தூதுவர் ஒருவரை நியமிக்குமாறும், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைக்குமாறும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில்,  ஆயுத போராட்டம் முடிவிற்கு வந்த பின்னரே தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் சிங்கள பெளத்தமயமக்கல் பெரும் வேகமெடுத்துள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.நா மனித உரிமை பேரவையில் நேற்று வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 

“தமிழர் தாயகமெங்கிலும், சிங்களவர்கள் இயல்பாக குடியிருக்காத பகுதிகளில் கூட, சிறிலங்கா அரச இயந்திரத்தின் துணையுடன் பெளத்த மத ஆலயங்கள்  அமைக்கப்பட்டு வருகின்றன.

அழிக்கப்படும் தமிழர் தொன்மை

யுத்த மௌனிப்பின் பின்னரான தாயக ஆக்கிரமிப்பு - சுய ஆட்சி இல்லா தேசம்! | United Nations Human Rights Council Geneva Eelam

நீதிமன்ற கட்டளையினை மீறி, தமிழரின் தொன்மையான வழிபாட்டிடமான குருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாடு அழிக்கப்பட்டு அங்கு ஒரு பெளத்த விகாரை கட்டப்பட்டிருக்கிறது. 

அத்தோடு சில இடங்களில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பெளத்த ஆலயங்களை சூழ இருக்கும் பகுதிகளில், தமிழர் தாயகத்தின் இனப்பரம்பலை திட்டமிட்டு மாற்றியமைக்கும் முனைப்போடு, சிறிலங்கா அரச ஆதரவுடன் சிங்கள குடியேற்ற திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. 

ஆகவே, தமிழர் தேசமான ஈழத்தை சுய ஆட்சி இன்னமும் கிடைக்கப்பெறாத பகுதியாக ஐ.நா சபையில் அங்கீகரிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன். அத்துடன், சிறிலங்காவிற்கு ஐ.நா.வின் சிறப்பு தூதுவர் ஒருவரை நியமித்து,  சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைக்க வேண்டும். 

ஈழத்திற்கான அங்கீகாரம்

யுத்த மௌனிப்பின் பின்னரான தாயக ஆக்கிரமிப்பு - சுய ஆட்சி இல்லா தேசம்! | United Nations Human Rights Council Geneva Eelam

இன்னமும் சுய ஆட்சி பெறப்படாத நிலப் பகுதிகளாக இன்றைய நிலவரப்படி 17 பகுதிகளை ஐ.நா அமைப்பு அடையாளப்படுத்தி பிரகடனம் செய்துள்ள நிலையில், ஈழத்தையும் சுய ஆட்சி பெறாத பகுதியாக அங்கீகரிக்க வேண்டும்.

உண்மையில் தமிழர்களின் பாரம்பரிய புராதன அடையாள நிலமானது, சிங்கள பெளத்தமயமாக்கலுக்கான பகுதியாக சிறிலங்கா அரசினால் குறிவைக்கப்பட்டு, அங்கு இனப்பரம்பல் மாற்றப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், நாயாறு, தையிட்டி , நாவற்குழி, மாங்குளம் சந்தி, கச்சல் சமளங்குளம், கன்னியா வெந்நீரூற்று என்பன, இவ்வாறு தமிழர் தாயக நிலத்தில் பெளத்த ஆலயங்கள் அமைக்கப்பட்டுவரும் சில இடங்களாகும்.

இவற்றுள் பெரும்பாலனவை சிறிலங்கா அரச ஆதரவோடு , தமது அரசின் நீதிமன்ற கட்டளைகளை தாமே மதிக்காது, உதாசீனப்படுத்தி, கட்டமைக்கப்பட்டு வரும் ஆலயங்கள்.

மேய்ச்சல் தரைகள் அபகரிப்பு

யுத்த மௌனிப்பின் பின்னரான தாயக ஆக்கிரமிப்பு - சுய ஆட்சி இல்லா தேசம்! | United Nations Human Rights Council Geneva Eelam

மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரை, தமிழர்கள் காலங்காலமாக 300,000 க்கும் மேற்பட்ட கால்நடைகளின் மேய்ச்சலுக்குப் பயன்படுத்திவரும் நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி, அங்கு சட்டவிரோதமான முறையில் சிறிலங்கா அரச ஆதரவோடு சோளப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் சிங்களவர்களால், தமிழர்கள் மேய்ச்சல் நிலங்களில் இருந்து துரத்தப்படுகின்றனர்.

அதுமட்டுமன்றி, “மாதுரு ஓயா வலதுகரை அபிவிருத்தி திட்டம்” எனும் பெயரில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டமானது, அந்தப் பகுதியில் இருக்கும் தமிழர்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு, சிங்களவர்களை குடியேற்றி இனப்பரம்பலை மாற்றவே சிறிலங்கா அரசினால் பயன்படுத்தப்படுகிறது.

இதேவேளை, புராதன தமிழ் சைவ வழிப்பாட்டிடமான வெடுக்குநாறி மலையினை பெளத்த புராதன பிரதேசமாக மாற்றியமைத்து பிரகடனப்படுத்தும் நோக்குடன், அப்பகுதியை சிறிலங்கா அரசின் தொல்பொருட்திணைக்களம் கையகப்படுத்தியிருக்கிறது.

யுத்தத்தின் பின்னரான ஆக்கிரமிப்பு

யுத்த மௌனிப்பின் பின்னரான தாயக ஆக்கிரமிப்பு - சுய ஆட்சி இல்லா தேசம்! | United Nations Human Rights Council Geneva Eelam

ஆயுத போராட்டம் முடிவுற்று 13 ஆண்டுகள் கடந்த நிலையிலும், நடைமுறையில் தமிழர்கள் மீது, சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட கலாசார இனவழிப்பும் முனைப்புடன் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். 

ஆகவே தான், தமிழர் தேசமான ஈழத்தினை, சுய ஆட்சி இன்னமும் கிடைக்கப்பெறாத பகுதியாக அங்கீகரிக்குமாறு இந்த அவையின் அங்கத்துவ நாடுகளிடம் கோருகிறோம்” எனவும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், London, United Kingdom

06 Dec, 2024
மரண அறிவித்தல்

செட்டிகுளம், London, United Kingdom

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, புளியங்குளம், பண்டாரிக்குளம்

25 Nov, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, Ajax, Canada

25 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, அல்லாரை

22 Nov, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, Scotland, United Kingdom

15 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025