சஜித் தரப்பிலும் வெடித்தது மோதல்
கடந்த ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) ஆகியோர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கை காலத்துக்கு ஏற்றதாக இல்லை என்றும், கட்சியினர் மத்தியில் நகைச்சுவையாக மாறி வருகிறது என்றும் கட்சியின் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்குதலை தொடுத்துள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு செயற்பாடுகள் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் முன்னெடுக்கப்படாவிட்டாலும், பல்வேறு உரைகளை நிகழ்த்தினாலும் இவ்வாறு அரசியலில் ஈடுபட முடியாது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கபீர் ஹாசிம் (Kabir Hashim, ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva), எரான் விக்ரமரத்ன (Eran Wickramaratne), மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara), அஜித் பி பெரேரா (Ajith P. Perera) மற்றும் சரத் பொன்சேகா (Sarath Fonseka) ஆகியோர் இந்த விமர்சனங்களை முன்வைத்துள்ளதாக அதன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.