நாடாளுமன்ற வன்முறையை அடுத்து ட்ரம்பின் முக்கிய அதிகாரிகள் ராஜினாமா?
Parliament
Donald Trump
United States of America
By Vasanth
அமெரிக்க நாடாளுமன்றத்தின் முன்னால் இன்றையதினம் ஜனாதிபதி டிரம்ப் ஆதரவாளர்களால் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் விரைவில் ராஜினாமா செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேட் ஓ பிரைன், துணை பாதுகாப்பு ஆலோசகர் மட் போட்டிங்கர், வெள்ளை மாளிகை துணை தலைமை அதிகாரி கிரிஷ் லிட்டல் ஆகியோர் ராஜினாமா கடிதங்களை தயார் செய்வதாக கூறப்படுகிறது.
டிரம்பின் மனைவி மெலனியாவின் முக்கிய உதவியாளர்கள் ஏற்கனவே தமது பதவிகளை ராஜினாமா செய்து விட்டு போய் விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இவர்கள் அனைவரும், டிரம்பின் பதவிக்காலம் வரை பணியில் இருக்கலாம் என்றாலும், நாடாளுமன்ற கலவரத்தை கண்டித்து பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி