பணிப்புறக்கணிப்பில் குதிக்கவுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்
அரச பல்கலைக்கழகங்களில் நாளை (30) ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக கூறி குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர், சிரேஸ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க (Charudaththe Ilangasinghe) இன்று (29) செய்தியாளர் சந்திப்பை நடத்தி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
நாட்டை விட்டு வெளியேறியவர்கள்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துவிட்டது. ஆனால் அரச பல்கலைக்கழகங்களில் உள்ள நெருக்கடிகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.
தற்போது அரச கல்வி வீழ்ச்சியடைந்து கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பற்றாக்குறை தற்போது கடுமையான நிலையில் இருக்கின்றது.
பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 200 விரிவுரையாளர்கள் வெளியேறியுள்ளனர்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
