யாழ்.பல்கலைக்கழக விடுதி மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள்

food student university of jaffna hostel
By Jaso May 13, 2021 01:13 PM GMT
Report

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அத்தியாவசிய பரீட்சைத் தேவைப்பாடுகளுக்காக விடுதிகளில் மாணவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென அறிவிக்கப்பட்ட பயணத் தடை காரணமாக மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் மாற்று ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

நாட்டில் எழுந்துள்ள பெருந்தொற்று அபாயம் மிக்க காலப்பகுதியிலும், இறுதி ஆண்டு மாணவர்களின் பரீட்சைத் தேவைப்பாடுகளை நிறைவு செய்வதற்காக சுகாதாரப் பகுதியினரால் அறிவிக்கப்பட்டபடி சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, மாணவர்களின் சுய விருப்பின் பேரில் விடுதிகளில் வெளித் தொடர்புகள் இன்றி பரீட்சைக்குத் தோற்றுவதற்கு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

எனினும் இன்று நள்ளிரவு முதல் அறிவிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளின் காரணமாகவும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துத் தடை காரணமாகவும் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் மாணவர் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிளிநொச்சியில் அமைந்துள்ள தொழில் நுட்ப பீடத்தின் இறுதியாண்டு மாணவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இணை மருத்துவ விஞ்ஞான பீடத்தின் இறுதியாண்டு மாணவர்களும் வீடுகளுக்குத் திரும்பும் வகையில் விசேட போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளுக்குத் திரும்ப முடியாத மாணவர்கள் விடுதிகளில் தங்குவதற்கும், அவர்களுக்குத் தேவையான உணவு விநியோகத்தைச் சீராக மேற்கொள்வதற்கும் மாணவர் நலச் சேவைகள் பிரிவு ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, மருத்துவ பீட இறுதியாண்டு மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள யாழ். நகர மருத்துவ பீட மாணவர் விடுதியில் தங்கியுள்ள சுமார் 150 மாணவர்களுக்கும், கிளிநொச்சி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 175 மாணவர்களுக்கும் , மருதனார்மடத்தில் அமைந்துள்ள இராமநாதன் நுண்கலைக் கழக விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 65 மாணவர்களுக்கும் அந்தந்த விடுதிகளின் உணவகங்கள் ஊடாக உணவு விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளது.

கோண்டாவில், கொக்குவில் மற்றும் ஆனந்தகுமாரசுவாமி மாணவர் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் சட்டத்துறை, இணை மருத்துவ விஞ்ஞானபீடம் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 69 மாணவர்களுக்கு வெளியில் இருந்து விடுதிக்கு உணவு விநியோகம் செய்யப்படவுள்ளது.

இதேநேரம், அடுத்துவரும் நாட்களில் அமுல்படுத்தப்படவுள்ள பயணத் தடை தளர்த்தப்பட்டதும், மாணவர்களின் விருப்பத்தின் அடிப்படையிலும், பரீட்சைச் செயற்பாடுகளின் தேவைக்கேற்பவும் அவர்கள் தத்தமது இடங்களுக்குச் செல்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் எனவும் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ReeCha
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025