கொழும்பில் ஒன்றிணையும் சஜித் - ரணில் தரப்புகள்: கேள்விக்குறியாகும் திசைகாட்டி
கொழும்பு மாநகர சபையில் 13 உறுப்பினர்களை பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி (UNP), அடுத்த மாநகர சபை நிர்வாகத்தை அமைப்பதிலும் முதல்வரை நியமிப்பதிலும் ஐக்கிய மக்கள் சக்தியை (SJB) ஆதரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
குறித்த விடயமானது, ஐக்கிய தேசிய கட்சியின் பிரிதித் தலைவர் ருவன் விஜேவர்தனவினால் (Ruwan Wijewardene) தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் கலந்துரையாடல்
அத்துடன், இது தொடர்பான கலந்துரையாடல்கள் விரைவில் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி (NPP) அதிக இடங்களை வென்ற போதிலும், எதிர்க்கட்சிகளே பெரும்பான்மையைக் கொண்டுள்ளன.
அநுர தரப்பின் நிலைப்பாடு
இதன்படி, கொழும்பு மாநகர சபையின் கட்டுப்பாட்டை பெற மற்றைய எதிர்கட்சிகளுடன் ஒத்துழைக்கும் நோக்கத்தை ஐக்கிய மக்கள் சக்தி உறுதிபடுத்தியுள்ளது.
இதேவேளை, கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிறுவதாக தேசிய மக்கள் சக்தியும் உறுதியளித்துள்ளதுடன், தேவையான ஆதரவைப் பெற பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்கள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
