இலங்கைக்குள் ஒமிக்ரோன் -சஜித் விடுத்த அவசர கோரிக்கை
நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு அதிகரிக்கப்பட வேண்டும்.ஆனாலும் ஒமிக்ரோனால் நாட்டு மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாகாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவின் பிரகாரம் சசுனட அருண நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மீகஹஜதுர புராதன விகாரையில் 25 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட ஞாயிறு போதனைகள் பாடசாலை கட்டிடம் இன்று (03) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
விகாரைக்குப் பொறுப்பான பிரதம தலைமை மத போதகர் அந்தரவெவ நந்தரதன தேரர் உட்பட மகா சங்கத்தினர் நிகழ்விற்கு பிரசன்னமாகி இருந்ததோடு,சூரியவெவ அம்பலாந்தோட்டை அமைப்பாளர் டி.வி.கே.காமினியின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாங்கள் முந்தைய நாள் நாடாளுமன்றத்தில் ஒமிக்ரோன் கொவிட் வகையைப் பற்றி பேசினோம்.நாட்டிற்கு வரும் அனைத்து வெளிநாட்டவர்களும் தங்கள் தடுப்பூசி நிலையைப் பார்ப்பதற்கு விமான நிலையத்தில் அமையப்பெற்றுள்ள இரண்டு ஆய்வகங்களில் பார்ப்பதை மேற்கொள்வதை விடுத்து, அனைத்து நபர்களும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நாட்டிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
ஆனால் அந்த முறை மேற்கொள்ளப்படவில்லை. இதற்குக் காரணம்,வெளிநாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவது நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், நம் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்க வேண்டும் என்று இருந்த போதிலும், இந்த புதிய வகை கொவிட் மூலம் இந்த நாட்டு மக்களை ஆபத்தில் ஆழ்த்த முடியாது. நம் நாட்டு மக்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டும்.
ஒமிக்ரோன் வகையினால் கண்டறியப்பட்ட முதலாவது இலங்கையர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.அப்போது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக் கருத்துக்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை.இன்னும் தாமதமாகவில்லை. நாட்டிற்குள் நுழையும் அனைவருக்கும் PCR பரிசோதனைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதை கட்டாயமாக்க வேண்டும். அப்படிச் செய்தால் நிலமையை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி குறைக்கலாம்.
அரசாங்கத்திடம் நான் வேண்டிக் கொள்வது என்னவென்றால்,திமிர் பிடிக்காமல், நாங்கள் சொல்லும் உண்மைகளையும் கேளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். கேட்பதில் தவறில்லை.கேட்டு நல்ல ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவதில் தவறில்லை. நாம் அனைவரும் தவறு செய்கிறோம். ஒரு தரப்பில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல,ஆனால் தவறுகளுக்குப் பிறகு நாம் அந்தத் தவறை புரிந்து கொண்டு,அதனால் நாங்கள் மாறுகிறோம் என்று யாரும் வெட்கப்படக் கூடாது.இவ்வாறு செய்வதற்கான தன்னம்பிக்கை கூட இந்த அரசாங்கத்திற்கு இல்லை என்று தெரிவித்தார்.
தற்போது நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. நம் நாட்டுக்கு என்ன நடக்கிறது.ஒருபுறம் எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்புகள்.மறுபுறம் மண்ணெண்ணெய்க்கான வரிசை.பெற்றோலுக்கான வரிசை. பால் மா, அரிசி,சீனி வாங்க தாய்மார்கள் மற்றொரு புறம் வரிசையில் நிற்கின்றனர்.வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பணவீக்கம் அதிகரித்துள்ளது. மக்களால் வாழ முடியாது.நாட்டின் உள்ளூர் வளங்கள் கொள்ளையர்களுக்கு விற்கப்பட்டுள்ளன. யுகதனவியின் விற்பனை ஊடாக இந்த நாட்டில் எரிசக்தி பாதுகாப்பற்ற நிலையை உருவாக்குகிறது.இ
ந் நிலையில் இந்த நாடு முன்னோக்கி செல்ல முடியாது.ஒரு நாடாக நாம் முன்னேற வழி இல்லை. இவ்வாறான நிலையில் நாட்டில் உடனடி மாற்றம் ஒன்று தேவை. இந்த மாற்றம் நாடாளுமன்றத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றமல்ல.சிலர் ஏற்கனவே திட்டங்களை உருவாக்கி தேசிய அரசாங்கங்களை அமைக்கும் நோக்கில் உள்ளனராம். தேசிய அரசாங்கம் அமைவது என்பது நல்லது. தேசிய அரசாங்கங்களை உருவாக்குவது சொந்தப் பைகளுக்கு நல்லது.
ஆனால் இந்த நாட்டிற்கு மக்கள் சார்ந்த மாற்றம் ஒன்றே தேவை என்று நான் நம்புகிறேன்.அந்த மாற்றத்தை நாட்டு மக்கள் தான் ஏற்படுத்த வேண்டும். மக்கள் ஆணைக்கான நேரம் வந்துவிட்டது. நாட்டில் சிறந்த ஆட்சியை மேற்கொண்டு, முன் கொண்டு வர முடியாவிட்டால் அரசாங்கம் முடிவொன்றை எடுக்க வேண்டும் என நான் கூறுகின்றேன்.
இன்று எங்கும் நெருக்கடி உருவாகியுள்ளன. தீர்வுகளை வழங்குவதற்கே அரசாங்கம் என்ற ஒன்று உள்ளது.எந்த ஒரு பிரச்சினைக்கும் இந்த அரசாங்கத்திடம் தீர்வு இல்லை.ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த நாட்டை பலப்படுத்த முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.