வியன்னா ஒப்பந்தத்தை மீறுகிறார் அமெரிக்க தூதுவர் - சரத் வீரசேகர கொதிப்பு
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் வியன்னா ஒப்பந்தத்தை மீறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமெரிக்க தூதுவர் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.இதன்போது நிரந்தர சமாதானத்தை அடைய சிறுபான்மை சமுகங்கள் மீதான நம்பிக்கையை சிறிலங்கா இராணுவம் கட்டியெழுப்ப வேண்டும் என உபதேசம் செய்துள்ளார்.
வியன்னா ஒப்பந்தத்தை மீறுகிறார்
@USAmbSL has met with #SriLanka Army Commander re t need to build trust w. minority communities for lasting peace. And She has also spoken to civil society leaders in Jaffna.
— Sarath Weerasekera (@ReAdSarath) August 27, 2023
She should be reminded that as an Ambassador, she is violating t Vienna Convention by interfering.. ??
இதன்மூலம் அவர் ஒரு தூதுவராக இருந்து கொண்டு வியன்னா ஒப்பந்தத்தை மீறுகிறார் என்பதை அவருக்கு நினைவுபடுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.