ஈரானில் அதிரும் வெடிச்சத்தங்கள்...! அமெரிக்கா வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பு
ஈரானின் கொனாரக், புஷெர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்டு வரும் நிலையில் அது குறித்து அமெரிக்க இராணுவம் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
கடந்த சில மணிநேரங்களாக அமெரிக்க இராணுவம் ஈரான் மீது எந்தவொரு புதிய வான்வழித் தாக்குதலையும் நடத்தவில்லை என அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றிடம் அவர் இதனை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
திடீர் குண்டுவெடிப்பு
ஈரானிய நகரங்களில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த திடீர் குண்டுவெடிப்புகளுக்கான மற்றும் வெடிச்சத்தங்களுக்கான உண்மையான காரணம் என்னவாக இருக்கும் என்பது குறித்து அமெரிக்க இராணுவம் தங்களது கணிப்புகள் எதையும் ஊடகங்களிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.

இருப்பினும் தற்போதைய நிலவரப்படி இந்த வெடிச்சம்பவங்களுக்கும் அமெரிக்காவிற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதை மட்டும் அந்த அமெரிக்க அதிகாரி திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்கா இந்தத் தாக்குதலில் தங்களுக்குப் பங்கில்லை என்று மறுத்துள்ளதால இந்த வெடிச்சத்தங்கள் ஈரானின் சொந்த வான் பாதுகாப்பு அமைப்புகள் ஏவுகணைகளை இடைமறித்ததால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |