ஈரான் அணுவாயுத கிடங்கை நோக்கி அமெரிக்க படைகள்! ட்ரம்ப் அறிவிப்பு
ஈரானின் அணு ஆயுதக் கிடங்கை மீட்பதற்காக அமெரிக்கப் படைகளை அனுப்புவதற்குத் தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த நடவடிக்கை தெஹ்ரானுடனான ஒரு சுமுகமான ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலின் மையப்புள்ளியாக ஈரானின் அணுசக்தித் திட்டமும், அதன் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்புமே விளங்குகின்றன.
கடுமையான இராணுவத் தாக்குதல்
இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய ட்ரம்ப், இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டு நட்புணர்வு ஏற்பட்டால், இரு தரப்பும் இணைந்து அந்த உபகரணங்களை அந்த இடத்திலேயே அல்லது வேறு இடத்திற்கு எடுத்துச் சென்று முழுமையாக அழிப்போம் என்று கூறியுள்ளார்.

ஒருவேளை ஒப்பந்தம் எதுவும் எட்டப்படாவிட்டால், அமெரிக்கப் படைகள் ஈரானுக்குள் நுழைவதற்கு முன்பாகவே அந்நாட்டின் மீது மிகக் கடுமையான இராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்தக் கையிருப்பை மீட்கும்போது இரு வழிகளிலும் முழுமையான பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்றும், தங்கள் மீது யாரும் துப்பாக்கிச் சூடு நடத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |