ஜோ பைடன் மீதான அதிருப்தி : மூத்த அதிகாரி ஒருவர் பதவி விலகல்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காசா மோதலை கையாளும் முறைக்கு அதிருப்தி வெளியிட்டு அமெரிக்க கல்வித் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பதவி விலகியுள்ளார்.
இந்தப் போருக்கு எதிராக அமெரிக்க நிர்வாகத்தில் அதிகரித்து வரும் அதிருப்தியின் தொடர்ச்சியாகவே இந்தப் பதவி விலகல் அமைந்துள்ளது.
இந்த விவகாரத்தால் எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியை சந்திக்கக் கூடும் என்று பைடனுக்கு அவரது பிரசாரக் குழுவைச் சேர்ந்தவர்கள் அனுப்பிய கடிதம் ஒன்றில் எச்சரித்துள்ளனர்.
இஸ்ரேலுக்கு ஆதரவு
கல்வித் திணைக்களத்தின் திட்டமிடல், மதிப்பீடு மற்றும் கொள்கை மேம்பாட்டு அதிகாரியான தாரிக் ஹபாஷ் கல்விச் செயலாளர் மகுவேல் கார்டோனாவுக்கு அனுப்பி இருக்கும் கடிதத்தில்,
“அப்பாவி பலஸ்தீனர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் கொடுமைகள் தொடர்பில் நிர்வாகம் கண்மூடி இருப்பதை பார்த்து என்னால் தொடர்ந்தும் அமைதியாக இருக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இஸ்ரேலுக்கு கண்மூடித்தனமாக ஆதரவு வழங்குவதாகக் கூறிய முன்னாள் இராஜாங்கத் திணைக்கள அதிகாரி ஜோஷ் போல் கடந்த ஒக்டோபரில் பைடன் நிர்வாகத்தில் இருந்து பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |