இலங்கையை மீட்டெடுக்க வருகிறது அமெரிக்கா...
அமெரிக்க அதிகாரிகள் இலங்கை வருகை
பொருளாதார ரீதியில் முற்றாக வீழ்ச்சியடைந்து விட்ட இலங்கையை மீட்கும் அனைத்துலக நகர்வுகளின் ஒரு அங்கமாக வரும் திங்கட்கிழமை அமெரிக்க திறைசேரி திணைக்கள அதிகாரிகள் இலங்கைக்கு வரவுள்ள நிலையில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இலங்கை குறித்து உண்மைத் தகவல் அறிக்கையிடலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் சிறப்புக்குழு ஒன்று நேற்று இலங்கையில் பேச்சு நடத்தி திரும்பிய நிலையில் இலங்கைக்குச் வரும் அமெரிக்க திறைசேரி அதிகாரிகள இரண்டு நாடுகளுக்கும் இடையில் வரி ஒப்பந்ததை மையப்படுத்திய நகர்வுகளை மேற்கொள்ளக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
வரி ஒப்பந்ததை மையப்படுத்திய நகர்வு
இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அமெரிக்க திறைசேரி திணைக்கள அதிகாரிகள் இலங்கைக்கு வரவுள்ள நிலையில்; இந்தப் பயணத்தின் மூலம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான வழிகளை திறப்பது குறித்து நகர்வுகள் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இந்தோ - பசிபிக் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பு நகர்வுகளுடன் இலங்கையை பொருளாதார ரீதியில் கையாள்வதற்குரிய முயற்சிகள் வோஷிங்டனால் எடுக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே திறைசேரி அதிகாரிகளின் இலங்கைப் பயணத்துக்கு முன்னோட்டமாக இலங்கை குறித்த உண்மைத் தகவல் அறிக்கையிடல் ஒன்றை அமெரிக்கா கடந்த 21 ஆம் திகதி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், அனைத்துல நாணய நிதியத்தின் இலங்கைக்குரிய கடன் கொடுப்பனவுகளில் அரசியல் இருக்காது என்றாலும், மனித உரிமைகள் தொடர்பான கரிசனைகளுக்கு இடமிருக்குமென பிரித்தானியா கூறியுள்ளயமையும் குறிப்பிடத்தக்கது.
