கொழும்பில் நங்கூரமிடப்படவுள்ள அமெரிக்காவின் முன்னணி போர் கப்பல்
அமெரிக்க கடற்படையின் சாண்டா பார்பரா கப்பல் நாளை (ஓகஸ்ட் 16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளது.
அமெரிக்க தூதரகம் ஒரு அறிக்கையில், இந்த கப்பலின் முதல் வருகை இதுவாகும் என்று தெரிவித்துள்ளது.
இந்த விஜயம், அமெரிக்கா–இலங்கை உறவுகள் வலுப்பெறும் நிலையையும், பிராந்திய கடல் பாதுகாப்பிற்கான இருநாடுகளின் பொது உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துவதாக தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
மிகப்பெரிய கடற்படை பிரிவு
உலகின் மிகப்பெரிய முன்நிலையிலிருந்து இயங்கும் கடற்படை பிரிவு எனப்படும் அமெரிக்க கடற்படை 7வது படையின் ஒரு பகுதியாக உள்ள இந்த கப்பல், மேற்கு பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடலில் இயங்குகிறது.
தற்போது டெஸ்ட்ராயர் ஸ்குவாட்ரன் 7 (DESRON 7) கட்டுப்பாட்டில் உள்ள சாண்டா பார்பரா, தாக்குதல் தடுப்பு, கூட்டாண்மை வலுப்படுத்தல் மற்றும் கடல் நிலைத்தன்மைக்கு ஆதரவாக வழக்கமான ரோந்துப் பணிகளை மேற்கொள்கிறது.
இலங்கை வருவதற்கான காரணம்
2021ஆம் ஆண்டு பணியில் அமர்த்தப்பட்ட இந்த கப்பல், கடற்கரை மற்றும் அருகிலுள்ள கடல் பகுதிகளில் (littoral zones) நடவடிக்கைகளை மேற்கொள்ள வடிவமைக்கப்பட்டதாகும்.
மேலும், இலங்கை போன்ற பிராந்திய கூட்டாளிகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதன்படி, குறித்த கப்பல், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தனது பணியைத் தொடருவதற்கு முன் எரிபொருள் நிரப்புதல் மற்றும் பொருட்கள் ஏற்றுதல் போன்ற தேவைகளுக்காக குறுகிய நேரம் தங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

'திரிப்போலிக் குழு'வின் உள்ளே செயற்பட்ட ஒரு இரகசியப் பிரிவு - நேரடிச் சாட்சி கூறும் அதிர்ச்சிகரமான தகவல்கள்!!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்
