வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவம் ஒத்திவைப்பு
march
annual festival
vallipuram temple
By Vanan
வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் , ஆலய தர்மகர்த்தா சபை மகோற்சவத்தை எதிர்வரும் மாசி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது.
ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவ கால ஏற்பாட்டுக் கூட்டம் நேற்றைய தினம் வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறீ தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தின் முடிவில், இவ்வருடம் மகோற்சவம் நடாத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஆலய தர்ம கர்த்தா சபையினர், ஆலய நிர்வாகம், திருவிழா உபயகாரர்களுடன் ஆலய வளாகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை கலந்துரையாடல் ஒன்றினை நடாத்தி இருந்தனர்.
அக்கலந்துரையாடலின் முடிவில் , ஆலய மகோற்சவத்தை அடுத்த வருடம் மாசி மாதம் வரும் பூரணை மகம் நாளிற்கு ஒத்திவைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
3 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி