அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 5.7% வீழ்ச்சி
இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்ட சமீபத்திய வாராந்திர பொருளாதாரக் குறிகாட்டிகளின்படி, 2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கை ரூபாயின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு எதிராக 5.7% சரிவை சந்தித்துள்ளது.
ஆகஸ்ட் 28 நிலவரப்படி, இந்த ஆண்டில் இதுவரை அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 5.7% சரிந்துள்ளது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்த வாரத்தில் கடன் வழங்கும் விகிதங்கள் சற்றே உயர்ந்தததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொழும்பு பங்குச் சந்தையின் வாராந்திர பதிவு
எடையிடப்பட்ட சராசரி முதன்மை கடன் விகிதம்( WPLR / WALR)ஒன்பது அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்து 10.95% ஆகா மாறியதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

அத்தோடு எடையிடப்பட்ட சராசரி அழைப்பு பண விகிதம், முந்தைய வார இறுதியில் இருந்த 8.81%-இலிருந்து 8.84%-ஆக உயர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி உள்நாட்டு சந்தையில் பணப்புழக்கம் உபரியாகவே நீடிப்பதாக கூறப்படுகிறது.
முந்தைய வார இறுதியில் ரூ. 278.51 பில்லியனாக இருந்த மொத்த சந்தைப் பணப்புழக்கம், ஆகஸ்ட் 28 நிலவரப்படி ரூ. 318.13 பில்லியனாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி கொழும்பு பங்குச் சந்தையின் வாராந்திர பதிவும் சரிவு நிலையை எட்டியுள்ளது. மேலும், அனைத்துப் பங்கு விலைக் குறியீடு 0.47% சரிந்து 21,315.91 புள்ளிகளாகவும், கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) பட்டியலிடப்பட்டுள்ள 20 முன்னணி மற்றும் மிகப்பெரிய நிறுவனங்களின் செயல்பாட்டைக் கண்காணிக்கும் ஒரு முக்கிய பங்குச் சந்தைக் குறியீடும்(SPSL 20) குறியீடு 0.38% சரிந்து 6,005.34 புள்ளிகளாகவும் குறைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |