வவுனியா வைத்தியசாலை வைத்தியர்கள் உட்பட 76பேருக்கு கொரோனா தொற்றுறுதி!
hospital
corona
vavuniya
doctors
PCR test
By Kalaimathy
வவுனியா வைத்தியசாலையில் கடமைபுரியும் வைத்தியர் உட்பட 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு, தெற்கு, செட்டிகுளம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தது.
அந்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா வைத்தியசாலையில் கடமை புரியும் இரண்டு வைத்தியர்கள், மற்றும் இராணுவ வீரர் உட்பட 76 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதேவேளை அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதுடன்,
தொற்றுறுதியானவர்களை கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி