வவுனியா - மன்னார் வீதியில் விபத்து! தாய் ஒருவர் பலி
Mannar
Vavuniya
Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
வவுனியா - மன்னார் வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்றினால் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து வவுனியா - மன்னார் வீதியில் பம்பைமடு இராணுவ முகாமிற்கு அருகில் இன்று (10)இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
வவுனியா, குருக்கள் புதுக்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி தனது மகனுடன் மோட்டார் சை்க்கிள் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது பம்பைமடு இராணுவ முகாமிற்கு அருகில் வீதியில் நின்ற மாட்டுடன் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்தில் வி.ஜெயந்தினி (வயது 45) என்பவர் பலியாகியுள்ளதுடன், அவரின் மகன் விஜயரட்னம் சிவரோஜன் (வயது 22) காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா, பூவரசங்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்