உச்சம் தொடும் பச்சை மிளகாயின் விலை
Economy of Sri Lanka
Vegetables
Vegetables Price
Vegetable Price Today
By Thulsi
சந்தையில் பச்சை மிளகாயின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், பச்சை மிளகாயின் விலை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கலாம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் தெரியாத நோய் பரவுவதால் பச்சை மிளகாய் செடிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என மதவாச்சி மற்றும் கெப்பட்டிப்பொல விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மரக்கறிகளின் விலை
அதன்படி, தற்போது பச்சை மிளகாய் சந்தையில் 700 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.

மிளகாய் விலை அதிகரிப்பால், மிளகாய் விற்பனையும் கடுமையாகக் குறைந்துள்ளதாகவும், இதனால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
பச்சை மிளகாய் உள்ளிட்ட ஏனைய சில மரக்கறிகளின் விலையும் பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
6ம் ஆண்டு நினைவஞ்சலி