வாராந்த பொதுச் சந்தையில் மனித பாவனைக்குதவாத மரக்கறிகள் அழிப்பு
கிண்ணியா நகர சபைக்குட்பட்ட வாராந்த பொதுச் சந்தையில் பாவனைக்குதவாத மரக்கறிகள் இன்று (03) கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி தலைமையிலான குழுவினர் திடீர் விஜயம் மேற்கொண்டு இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பழுதடைந்ததும் பாவனைக்கு உதவாததும் என கழிக்கப்பட்டு ஆடு, மாடு. பன்றிகளுக்கு என கொட்டப்படுகின்ற கிழங்கு, வெங்காயம், மரக்கறி வகைகளை சில வியாபாரிகள் சேகரித்து கொண்டு விற்பதாகவும் இன்னும் சிலர் வீட்டில் வைத்தே அவற்றை உரித்து துப்பரவாக்கி ஹோட்டல்களுக்கும் உணவகங்களுக்கும் குறைந்த விலையில் வழங்குவதாகவும் பொது மக்கள் முறைப்பாட்டை அளித்தனர்.
வாராந்த சந்தைக்கு திடீர் விஜயம்
இதனை அடுத்து தவிசாளர், கிண்ணியா நகர சபையின் குத்தகைக்கு வழங்கப்பட்ட வாராந்த சந்தைக்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அவற்றை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார்

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |