யாழ். போதனாவிற்கு மருந்துகளை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை ஏற்றிச் சென்ற வைத்தியசாலை வாகனம் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் முல்லைத்தீவு, கொக்காவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கொழும்பில் இருந்து , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் பழுதடைந்த நிலையில் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
இதையடுத்து வாகனத்தில் இருந்த மருந்துகள் பாதுகாப்பாக இறக்கப்பட்டு மற்றுமொரு வாகனத்தில் ஏற்றிச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கும் சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகனத்தின் சாரதி மற்றும் அவருடன் பயணித்த இரு வைத்தியசாலை ஊழியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்
அதேவேளை குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |