சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல்
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனங்கள் மற்றும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக மூதூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளர்.
குறித்த கைது நடவடிக்கை மூதூர் காவல்துறை பிரிவில் நேற்று சனிக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.
இதன்போது அனுமதிப்பத்திரமின்றி பரவிபாஞ்சான் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 உழவு இயந்திரங்களும் அதன் சாரதிகளும் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாரதிகளும் கைது
அதேவேளை மூதூர் -மணற்சேனை பகுதியில் உள்ள காணியொன்றில் அனுமதிப்பத்திரமின்றி மண் ஏற்றிய 4 உழவு இயந்திரங்கள், ரோலர் இயந்திரமும் மூதூர் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் டிப்பர் வாகனமொன்றும் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட வாகனச் சாரதிகளை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
பரபரப்பு சம்பவம்: வெள்ளை மாளிகை விருந்தில் துப்பாக்கிச் சூடு - இலக்கு வைக்கப்பட்ட ஜனாதிபதி ட்ரம்ப்..!
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்