தென்னிந்திய நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
தென்னிந்திய பிரபல நடிகர் டெல்லி கணேஷ் (Delhi Ganesh) உடல்நலக்குறைவால் காலமானார்.
கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்பட்டது. சென்னை (Chennai) ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (09) இரவு 11 மணியளவில் அவர் தூக்கத்திலேயே காலமானதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
இவர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் தனித்துவ பாணியைப் பின்பற்றிச் சாதித்தவர். டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
திரையுலகில் வில்லன்
இவரின் மறைவிற்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாடக நடிகராக இருந்து தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் டெல்லி கணேஷ் நடித்துள்ளார்.
தூத்துக்குடியில் (Thoothukudi) பிறந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
தமிழில் நாயகன், அபூர்வ சகோதரர்கள், சங்கமம், அவ்வை சண்முகி, இந்தியன் 2 உட்பட 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் டெல்லி கணேஷ்.
பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது ஐபிசி தமிழ் செய்தித் தளம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |