அரச பயங்கரவாதம் - பொதுமக்களை அடித்து இழுத்துச்சென்ற காவல்துறை - ஸ்ரீகாந்தா கண்டனம்

Mannar Anura Kumara Dissanayaka National People's Power - NPP NPP Government
By Thulsi Sep 29, 2025 09:31 AM GMT
Report

மன்னாரில் தமது இருப்பின் உரிமைக்காக போராடும் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை வன்முறையானது மீண்டும் தமிழ் மக்கள் மீது அரங்கேற்றப்பட்ட அரச பயங்கரவாதத்தின் அப்பட்டமான வெளிப்பாடு என தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என். ஸ்ரீகாந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாட்டின் வீதியிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த

அவர் மேலும் கூறுகையில், மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்துக்கு எதிரான அம்மாவட்ட மக்களது உண்மையான நீதியான போராட்டத்தை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அது சட்ட விரோதமானது என கருதியிருந்தால் அதில் ஈடுபட்ட மக்களை சட்ட ரீதியாக கைது செய்திருக்க வேண்டும்.

அர்ச்சுனா எம்.பிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

அர்ச்சுனா எம்.பிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

ஜனநாயக ரீதியான போராட்டங்கள்

ஆனால் அவர்களை தாக்குவதற்கும் காயங்களை ஏற்படுத்துவதற்கும் அரசுக்கு எந்த அதிகாரமும் இருக்க முடியாது.

அரச பயங்கரவாதம் - பொதுமக்களை அடித்து இழுத்துச்சென்ற காவல்துறை - ஸ்ரீகாந்தா கண்டனம் | Violence Against Public Protest In Manner

அனுர தலைமையிலான அரசு பதவியேற்று ஒரு வருடம் நிறைவுக்கு வரும் இந்த சூழ்நிலையில், அரசு நடத்தி இருக்கிற இந்த காட்டு தர்பார், என்பது, அரசுக்கு எதிரான ஜனநாயக ரீதியான போராட்டங்கள், பாரிய அளவில் பரந்து விரிவடையும் பொழுது அரசு அவை தொடர்பிலே எந்தகைய அணுகு முறையை கையாளும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவே நாங்கள் கருதுகிறோம்.

அத்துடன் இந்த அடாவடியை அங்கீகரிக்கவோ அல்லது ஆமோதிக்கவோ ஜனநாயகத்தை மக்களது அடிப்படை உரிமைகளை மதிக்கின்ற எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மக்கள் கடந்த காலத்தில் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில், காற்றாலை திட்டம் தொடர்பில் ஒரு பரந்த அளவிலானதும் அந்த திட்டத்திற்கு எதிராக மன்னார் தீவில் எழுந்திருந்த நிலையில், 80 நாட்களாக இந்த போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்ற நிலையில், அதை நசுக்க இந்த அரசு முயற்சிக்கின்றது.

கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு : இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு : இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மக்களுடைய எதிர்ப்பலை

இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் வரை சென்று போராடும் மக்கள், இந்த திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்கள். இந்த பின்னணியிலே அரசாங்கம் இந்த பிரச்சினையை நிதானமாக கையாள இந்த அரசு முனைந்திருக்க வேண்டும்.

அரச பயங்கரவாதம் - பொதுமக்களை அடித்து இழுத்துச்சென்ற காவல்துறை - ஸ்ரீகாந்தா கண்டனம் | Violence Against Public Protest In Manner

உண்மையில் என்ன நடந்தது என்பதை ஆராய்ந்திருக்க வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை இரவிரவாக காற்றாலை உபகரணங்கள் உதிரிப்பாகங்கள் இயந்தரங்கள் எல்லாம் மன்னார் தீவுக்குள் கொண்டுவரப்பட்ட போது அதற்கு மக்களுடைய எதிர்ப்பலை எழுந்திருந்த நேரத்தில், அதை நிதானமாக கையாள அரசு முயற்சித்திருக்க வேண்டிய நிலையில், அரசு காட்டுமிராண்டித்தனமான முறையில் அந்த மக்களை அடித்து துவைத்து இருக்கிறது.

இதனால் சிலர் காயமடைந்து இருக்கிறார்கள். இதன் ஊடாக ஜனநாயக போராட்டங்களில் ஈடுபடுகிற மக்களுக்கு மாத்திரமல்ல, தமிழ் மக்களுக்கும் கூட இந்த அரசாங்க ஒரு செய்தியை சொல்லி இருப்பதாகத்தான் கருத வேண்டி இருக்கிறது.

குறிப்பாக அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் ஒரு எல்லையைத் தாண்டுமாக இருந்தால் அரசாங்கம் தன்னுடைய பலத்தை மக்கள் மீது பிரயோகிக்க தயங்காது என்பதை அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது. இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என கோருகின்றேன் இப்பொழுது கூட நேரம் கடந்து விடவில்லை.

உண்மைகளை உணர வேண்டும்

அரசாங்கம் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசி தன்னுடைய நிலைப்பாட்டில் கூட அவர்களுக்கு எடுத்துரைத்து ஒரு நிதானமாக தீர்வுக்கு வர முடியும்.

அரச பயங்கரவாதம் - பொதுமக்களை அடித்து இழுத்துச்சென்ற காவல்துறை - ஸ்ரீகாந்தா கண்டனம் | Violence Against Public Protest In Manner

ஆனால் நசுக்க முடியும் என்ற எண்ணத்திலே அரசாங்கம் செயற்படுமாக இருக்கின்றது. குறிப்பாக தமிழ் தேசியம் சார்ந்த அரசியல்வாதிகள் இந்த உண்மைகளை உணர வேண்டும்.

முழு இலங்கை தீவிலும் வாழ்கிற தமிழ் மக்கள் ஏன் ஜனநாயக உரிமைகளை மதிக்கிற சிங்கள மக்களுக்கு கூட உணர்வினை ஒன்று பட்டிருக்கிறார்கள் என்பதையும் இந்த சந்தர்ப்பத்திலே நான் சொல்லி வைக்க விரும்புகிறேன் என்றும் தெரிவித்திருந்த்மை குறிப்பிடத்தக்கது.

நீண்ட மெளனத்தின் பின் வீட்டிலிருந்து வெளியேறிய விஜய்

நீண்ட மெளனத்தின் பின் வீட்டிலிருந்து வெளியேறிய விஜய்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கொழும்பு

29 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
மரண அறிவித்தல்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Kempen, Germany

22 Sep, 2025
மரண அறிவித்தல்

சுருவில், London, United Kingdom

26 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

24 Sep, 2025
22ம் ஆண்டு நினைவஞ்சலி

கும்புறுபிட்டி, உவர்மலை

29 Sep, 2003
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025