போர்க்காலத் தேர்தல் உக்ரைனை அழித்துவிடும்: ஜெலென்ஸ்கி எச்சரிக்கை
ரஷ்யாவுடன் தீவிரமான போர் தொடர்ந்துகொண்டிருக்கும் வேளையில், உக்ரைனில் போர்க்காலத் தேர்தலை நடத்துவது உக்ரைனியர்களைப் பிளவுபடுத்தி நாட்டை அழித்துவிடும் அந்நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் இன்று வெளியிடப்பட்ட அவரது கருத்துக்களில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மைக்கலோ ஃபெடோரோவ் ஒரு பரபரப்பான உரையில் போர்க்காலத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்ததிலிருந்து, இந்த விடயம் குறித்து ஜெலென்ஸ்கி தெரிவித்த முதல் கருத்து இதுவாகும்.
பரவலான போராட்டங்கள்
கடந்த மாதம் ஃபெடோரோவின் திடீர் பதவி நீக்கம் பரவலான போராட்டங்களைத் தூண்டியது. ஆனால், அவரை மீண்டும் பதவியில் அமர்த்தக் கோரிய அவரது ஆதரவாளர்கள், பின்னர் அவர் விடுத்த தேர்தல் அழைப்பைக் கண்டு தயங்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2022-ல் ரஷ்யா தனது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, ஒரு முக்கிய உக்ரேனிய அரசியல் பிரமுகர் விடுத்த முதல் தேர்தல் கோரிக்கை இதுவாகும்.
இதற்கு பதில் வழங்கும் விதமாக"நாம் நாட்டை அழிக்க விரும்பினால், இதுபோன்ற போரின்போதே தேர்தல்களை நோக்கி நகரலாம் என்று நான் நம்புகிறேன்," என்று ஜெலென்ஸ்கி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |