தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை பிரதேச ஆராய்ச்சி நிலையத்தை திறந்து வைத்தார் டக்ளஸ்!
கிளிநொச்சி மாவட்ட பூநகரி பள்ளிக்குடா தெளிகரை பகுதியில் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை பிரதேச ஆராய்ச்சி நிலையம் அதிகாரபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (05) இந்த தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை பிரதேச ஆராய்ச்சி நிலையமானது உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை (நாரா) பிராந்திய ஆய்வு நிலையமானது, வடமாகாண கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த த சில்வாவின் அழைப்பில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் (Douglas Devananda) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பலரும் கலந்துகொண்டிருந்தனர்
இந்த நிகழ்வில், கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த த சில்வா மற்றும் கிளிநொச்சி ,யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் ,முல்லைத்தீவு ,ஆகிய மாவட்டங்களின் பிரதேச செயலாளர்கள்.
தவிரவும், நிமால் குமாரசிங்க (நாரா நிறுவனம்) கமல் தென்னகோன் (Nara Dg) ஆளுநர் சபை உறுப்பினர்கள் மற்றும் நாரா நிறுவன சிரேஸ்ட விஞ்ஞானி அருளானந்தம் , ஏனைய விஞ்ஞானிகள் , பணிப்பாளர்கள், நிறுவன அதிகாரிகள் , பணியாளர்கள், நக்டா மாவட்ட உதவிப் பணிப்பாளர் நிருபராஜ் மற்றும் வடக்கு கடற்படை தளபதி எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |